சொல்வளமும் பொருட்சிறப்பும் சிந்தனைத் தெளிவும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இது. 1945 முதல் 53 தலைப்புகளில் கலைஞர் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அண்ணா மறைந்தபோது கலைஞர் எழுதிய ‘இதயத்தைத் தந்திடு அண்ணா' என்னும் பாடலும், கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது கலைஞர் எழுதிய ‘என் இனிய நண்பா! ஏன் பிரிந்தாய்?' என்னும் இரங்கற்பாடலும் இடம்பெற்றுள்ளன. 53 கவிதைகளில் 28 கவிதைகள் கவியரங்கக் கவிதைகள்.